Diya Suriya: `இந்த அழகான பயணத்தில்…' லைட் வுமன்கள் பற்றிய ஆவணப்படம்; தந்தை – தாயிடம் பாராட்டு

சூர்யா – ஜோதிகாவின் மகளான தியா சூர்யா ஆவணப்படத்தின் இயக்குநராக கவனிக்க வைத்திருக்கிறார்.

ஆம், லைட் வுமன்களின் வாழ்க்கை பக்கங்கள் முழுவதையும் அலசும் வகையில் ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் தியா. இந்தியாவின் முதல் லைட் வுமனான ஹீத்தல் தேதியா, லைட் வுமன் லீனா, ஒளிப்பதிவாளர் ப்ரியங்கா சிங் ஆகியோர் இந்த ஆவணப்படத்தில் அவரவர் பயணத்தின் பகுதிகளை எடுத்துரைக்கிறார்கள்.

இந்தியாவில் முதல் பெண் லைட் வுமன் என அறியப்படும் ஹீத்தல் தேதியா லைட் வுமன்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் நிலவக்கூடிய சவால்களை எடுத்துரைத்திருக்கிறார். இன்றைய நவீன யுகத்தில் லைட் வகைகள் நம் வசதிக்கேற்ப பல வடிவங்களில் மெருகேறிவிட்டன. ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெரிய வடிவிலான, கனமான லைட்களை படப்பிடிப்பு தளத்தின் அனைத்து பக்கங்களுக்கும் சுமந்து செல்ல வேண்டியிருக்கும். இந்த மாதிரியான கடினமான சூழல்களை எப்படி எதிர்கொண்டார் என்பதை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். இதைத் தாண்டி அவரின் பணி அனுபவங்களையும் எடுத்துரைத்திருக்கிறார்.

Leading Light documentary by diya suriya

மேலும், மற்றுமொரு லைட் வுமன் லீனாவும் அவரின் அனுபவங்களையும் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கிறார். குறிப்பாக, இந்த லைட்டிங் துறையில் 75% சதவிதத்தினர் ஆண்களே இருக்கிறார்கள். டீமில் இருக்கும் ஆண்கள் லீனாவுக்கு எந்தளவுக்கு உதவியாக இருந்தார்கள் என்பதையும் கூறி லைட் வுமன்களின் மற்றொரு பக்கத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறார். திரைத் துறையில் பாலினப் பாகுபாடு குறித்து ஒளிப்பதிவாளர் பிரியங்கா சிங் இந்த ஆவணப்படத்தில் பேசியிருக்கிறார். திரைத் துறையில் ஓப்பீட்டளவில் பெண்களின் விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணத்தையும் எடுத்துரைத்திருக்கிறார்.

ஆவணப்படத்திற்கான இலக்கணத்தோடு அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் முதிர்ச்சியுடன் பணிகளை கவனித்திருக்கிறார்கள். அயர்ச்சியடைய வைக்காத படத்தொகுப்பு நுட்பம் போன்ற விஷயங்கள் கவனிக்க வைக்கிறது. ஸ்ரீவர்தன் ஷர்மா என்பவர் ஒளிப்பதிவாளராக இந்த ஆவணப்படத்தில் பணியாற்றியிருக்கிறார். சூர்யாவின் `2டி என்டர்டெயின்மென்ட்’-ல் படத்தொகுப்பாளராக இருக்கும் நாஷ் என்பவர்தான் இந்த ஆவணப்படத்தை கத்தரித்திருக்கிறார். திரைப்படங்களின் ஒவ்வொரு ப்ரேமுக்குள்ளும் ஒளியைக் கொடுக்கும் லைட்மேன் மற்றும் லைட்வுமன்களின் வாழ்க்கை வெளிச்சத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம். பல லைட்மேன்கள் பற்றியக் கதையை நாம் கேட்டிருப்போம். ஆனால், சொல்லமல், கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்ற லைட்வுமன்களின் பக்கத்தையும் பதிவு செய்திருக்கிறார் தியா சூர்யா.

Diya Suriya

இவரை வாழ்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சூர்யா, ” அன்புள்ள தியா, இந்த ஆவணப்படத்தை நீ இயக்கியதை எண்ணிப் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் அற்புதமான பெண்களுக்கு நீ குரல் கொடுத்திருப்பது ஊக்கமளிக்கிறது. இந்த அழகான பயணத்தில் இது உன்னுடைய தொடக்கம்தான். உனது கனவை நோக்கி நகர்ந்துச் செல். இந்த பயணம் உன்னை அடுத்தடுத்து எங்கு அழைத்துச் செல்கிறது என பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.

நடிகை ஜோதிகாவும், ” சினிமா துறையில் பாகுபாட்டை சந்தித்து வரும் லைட் வுமன்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ள ஆவணப்படமாக நீ எடுத்திருப்பதை எண்ணி பெருமைக் கொள்கிறேன். இந்த அடிப்படை பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றி.” என பதிவிட்டிருக்கிறார்.

வாழ்த்துகள் தியா சூர்யா

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.