அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ , ‘குட் பேட் அக்லி’ என இரண்டு திரைப்படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.
அடுத்தாண்டு கார் ரேஸிங் பக்கமும் அஜித் களமிறங்கவுள்ளார். அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிவிடும் என பேசப்பட்டு வந்த நிலையில் இன்னும் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையாததால் ரிலீஸ் இன்னும் தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது.

மற்றொரு பக்கம் ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் பிரசன்னாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் என பேசப்பட்டு வந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தி ‘குட் பேட் அக்லி’ படத்தின் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரசன்னா.
அவர், ” இந்த முறை நம் அன்பான தல அஜித் சாரின் படத்தில் நடிப்பது உறுதியான தகவல்தான். இது எனக்கு கனவு நனவான தருணம். மங்காத்தா திரைப்படத்திலிருந்து நான் அஜித் சாரின் படங்களில் இருப்பதாக யூகித்து சமூக வலைதளப் பக்கங்களில் அவரின் ரசிகர்கள் வாழ்த்துகளை பதிவிடுவார்கள். ஆனால், கோப்பையிலிருந்து உதடுக்குச் செல்வதற்குள் தடுமாறி சறுக்கியிருக்கிறது.
Dear friends and wellwishers,
This time It’s finally true that I’m part of our beloved Thala Ajith Kumar sir’s film. It’s a dream come true for me. Since Mankatha, every time AK sir’s films were announced, I was supposed to be a part of those. His fans kept speculating and… pic.twitter.com/S9nEjonNgc— Prasanna (@Prasanna_actor) October 3, 2024
ஆனால் நான் இப்போது ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். இப்போதே பல விஷயங்களை சொல்ல முடியாது. என்னுடைய முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கிவிட்டது. அஜித் சார் இப்படி இருப்பதனால்தான் அவருக்கு ரசிகர்களின் அளப்பரிய அன்பு கிடைக்கிறது. நீங்கள் நான் நினைத்தது போலவே ரொம்ப பணிவானவர் அஜித் சார்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…