Lokesh kanagaraj: `உங்களிடமிருந்து இதைக் கேட்பது பெருமை' – பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தில் ரஜினியுடன், சத்யராஜ், ஷ்ருதி ஹாசன், நாகர்ஜூனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் செளபின் சாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்திற்குப் பிறகு… அதாவது 38 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் நடிக்கிறார் சத்யராஜ்.

இவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவர், ” கூலி திரைப்படத்திற்காக உங்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு நல்ல அனுபவமாக அமைத்திருக்கிறது. இது எனக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கும் பயணமாகவும் அமைத்திருக்கிறது. இதே போல தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளியுங்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

Lokesh Kanagaraj

இதுமட்டுமின்றி, நடிகர் மற்றும் ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சமீபத்திய பேட்டியில், ” எனக்கு யோகி பாபுவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இயக்குநர் மணி ரத்னத்தின் திரைப்படங்கள் எனக்கு பிடிக்கும். இப்போது சமீபத்தில் வெளியான ‘லியோ’, ‘விக்ரம்’ ஆகிய திரைப்படங்கள் எனக்குப் பிடித்திருந்தது. லோலேஷ் கனகராஜின் படங்கள் எனக்கு பிடித்திருக்கிறது.” எனக் கூறியிருந்தார். இது பற்றி லோகேஷ் கனகராஜ், ” உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்பது எனக்குப் பெருமை. என்னுடைய படங்கள் உங்களுக்கு பிடித்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். மிகப் பெரிய நன்றி.” எனவும் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.