Nani:`இப்படிபட்ட அரசியல்வாதிகளை பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது’ – சமந்தா விவகாரத்தில் நானி காட்டம்

பிரபல நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்வில் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த நிலையில், தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா அளித்த ஒரு பேட்டியில், “சமந்தா மீது தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் விருப்பம் கொண்டார். அதனால் ஏற்பட்ட பிரச்னைகளால் சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து விட்டார்.

கே.டி.ராமராவ் – கொண்டா சுரேகா

இந்த ஜோடியின் பிரிவுக்கு, தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ்தான் காரணம்” எனக் குறிப்பிட்டார். இதற்கு நடிகர்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் பதிவாகிவருகிறது.

‘நான் ஈ’ உள்ளிட்ட பல படங்களில் நடிகை சமந்தாவுடன் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் நானி தன் எக்ஸ் பக்கத்தில், “எப்பேர்ப்பட்ட முட்டாள்தனமான கருத்தை பேசினாலும் தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது.

நீங்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளிலேயே இவ்வளவு பொறுப்பற்றத்தனம் இருக்கும் போது, ​மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் உங்களின் பொறுப்பு சிறப்பாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்பது எங்களின் முட்டாள்தனம். இது நடிகர்கள் அல்லது சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இது எந்த அரசியல் கட்சிக்கும் பொருந்தாது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர், ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவதும், அதை சரி என்று நினைப்பதும் முறையல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.