Navaratri: நவராத்திரியில் நலம்பெற பாட வேண்டிய துதிப்பாடல்கள்!

நவராத்திரி நாள்களில் சரஸ்வதி, லட்சுமி, துர்கை ஆகிய முப்பெருந்தேவியரையும் வழிபடும்போது படிக்கவேண்டிய, துதிப்பாடல்கள் நம் ஞான நூல்களில் உண்டு. அவற்றில் சில இங்கே உங்களுக்காக!

கடுமையான கிரக தோஷங்கள், முன்னோர் கோபம், ருண-ரிண தோஷங்கள் என சகல பாதிப்புகளையும் நீக்கும் வல்லமையான ஸ்தோத்திரப் பாடல்கள் இவை. இவற்றைப் படித்து மனதார வழிப்பட்டால், செல்வகடாட்சம் உண்டாகும். வீட்டில் மங்கல காரியங்கள் ஸித்திக்கும். தடைகள் நீங்கி நீங்கள் நினைத்தது நல்லபடியே நிறைவேறும். பத்மபுராணத்தில் உள்ள அபூர்வ சரஸ்வதி ஸ்லோகம் சரஸ்வதி தேவியை வணங்கும் நாள்களில் கீழ்க்காணும் துதிப்பாடலைச் சொல்லி வழிபடுவது விசேஷம். பிரகஸ்பதியால் அருளப்பட்ட… பத்மபுராணத்தில் உள்ள கலைவாணி குறித்த இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தேவியை வழிபட, சகல கலைகளும் கைகூடும். பிள்ளைகளுக்கு கலைஞானம் பெருகும்.

நவராத்திரி கொலு பொம்மைகள்

ஸ்ரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருதிஸ்திதாம்

கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரியா ஸ்பதாம்!

மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்

ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸ காரிணீம்!

ஸுப்ரகாஸாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்

ஸுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸுபாங்காம் ஸோபனப்ரதாம்!

பத்மோபவிஷ்டாம் குண்டலீனீம் ஸுக்லவர்ணாம் மனோரமாம்

ஆதித்யமண்டலே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்!

இதி மாஸம் ஸ்துதானேன வாகீஸேன மஹாத்மனா

ஆத்மானம் தர்ஸயாமாஸ ஸரதிந்து ஸமப்ரபாம்!

கருத்து: சேதனர்களின் ஹிருதயத்தில் இருப்பவளாயும், பிரம்மாவின் கண்டத்தில் இருப்பவளாயும், எப்போதும் சந்திரனுக்குப் பிரியமுள்ளவளாகவும் பிரகாசிக்கும் ஸ்ரீசரஸ்வதிதேவியை வணங்குகிறேன்.

நல்லறிவு மற்றும் உயர்ந்த விஷயங்களைக் கொடுப்பவளாகவும், பரிசுத்தையாகவும், கையில் வீணையுடன் அபீஷ்டங்களைத் தருபவளாகவும், ஐம் ஐம், ஹ்ரீம், ஹ்ராம் என்ற மந்திரத்தில் விருப்பமுள்ளவளாகவும் திகழும் கலைமகளே உன்னை வணங்குகிறேன்.

விபரீத புத்தி உள்ளவர்களை நாசம் செய்பவளாகவும், நல்ல பிரகாசம் கொண்டவளாகவும், யாதொரு பிடிப்பில்லாதவளாகவும், அஞ்ஞானமாகிய இருட்டைப் போக்குகிறவளாகவும், வெண்மையாகவும்… மோக்ஷ புருஷார்த்தத்தை கொடுப்பவளாகவும், மிக்க அழகியவளாகவும், சோபமான அங்கங்களோடு கூடியவளாகவும் விளங்கும் சரஸ்வதிதேவியே உன்னை வணங்குகிறேன்.

மங்கலத்தை அருள்பவளாகவும், தாமரையில் இருப்பவளாகவும், அழகிய கர்ணாபரணத்தோடு கூடியவளாகவும், வெண்மை நிறம் கொண்டவளாகவும், மனதுக்கு சந்தோஷம் அளிப்பவளும், சூரிய மண்டலத்தில் இருப்பவளும், ஸ்ரீவிஷ்ணுவுக்கு பிரியையாகவும் உள்ள சரஸ்வதிதேவியை நமஸ்கரிக்கிறேன்.

தேவி பாகவதத்தில் உள்ள

சக்தி வாய்ந்த லட்சுமி ஸ்தோத்திரம்

ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம் 42-வது அத்தியாயத்தில் உள்ள மகாலட்சுமியின் இந்த தியான ஸ்தோத்திரத்தைச் சொல்லி வீட்டில் வழிபட அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்

ஸரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்

ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருஸ்யாம் மனோஹராம்

ப்ரதப்த காஞ்சனநிப ஸோபாம் மூர்திமதீம் ஸதீம்

ரத்நபூஷண பூஷாட்யாம் ஸோபிதாம் பீதவாஸஸா

ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் ஸஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்

ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே ஸுபாம்

கருத்து: ஆயிரம் இதழ்களுடன் கூடிய தாமரையின் நடுவில் வசிப்பவள்; சிறந்தவள்; சரத் காலத்திலுள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான ஒளியை உடையவள்; தனது ஒளியால் பிரகாசிப்பவள்; ஆனந்தமாகக் காட்சி அளிப்பவள் மகாலட்சுமி.

பக்தர்களின் மனத்தைக் கவர்பவள்; உருக்கி வார்த்த தங்கத்தின் ஜொலி ஜொலிப்பே உருவெடுத்து வந்தது போல் திகழ்பவள்; பதிவிரதை; ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவள்; தங்கப் பட்டாடை துலங்குபவள்; மந்தஹாஸத்தால் பிரஸன்ன முகம் கொண்டவள் அந்த அலைமகள்.

சாஸ்வதமாய் அமைந்த யௌவனத்தை உடையவள்; பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களை அளிப்பவள்; மங்கலத்தை அருள்பவள் திருமகள். இத்தகைய மகிமைகள் கொண்ட மகா லட்சுமியை வணங்குகிறேன்.

தேவி அஷ்டக்கத்தில் உள்ள அம்பாள் துதிப்பாடல்

ஜகத் கர்த்ரீம் ஜகத்தாத்ரீம்

ஜகத்ஸம்ஹாரகாரிணீம்

முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்

வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்

கருத்து: ஜகத்தை உருவாக்குபவளும், ஜகத்தை ரட்சிப்பவளும், உலகை கடைசியில் சம்ஹரிப்பவளும், மகரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும், மோக்ஷத்தைக் கொடுப்பவளுமாகிய தாயே… உன்னை வணங்குகிறேன்.

– நவராத்திரி வழிபாட்டின்போது, தேவி அஷ்டகத்தின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி அம்பாளை வழிபடுங்கள். இதனால் கிரக தோஷங்களும், சுமங்கலி கோபம், பசுவின் சாபம் போன்றவையும் விலகும். சகல நலன்களும் கைகூடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.