ஆன்மிகத்தின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் – ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜெய்ப்பூர்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஜஸ்தான் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மவுண்ட் அபுவில் ‘தூய்மையான, ஆரோக்கியமான சமூகத்திற்கான ஆன்மிகம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொண்டார். பிரம்ம குமாரி சன்ஸ்தான் என்ற அமைப்பு சார்பில் இந்த உச்சிமாநாடு ஒருங்கிணைக்கப்பட்டது.

இதில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆன்மிகம் என்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு வழி மட்டுமல்ல என்றும், சமூகம் மற்றும் நமது பூமி சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஆன்மிகத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்தார். உள்ளார்ந்த தூய்மையை, அடையாளம் காண முடிந்தால் மட்டுமே ஆரோக்கியமான, அமைதியான சமுதாயத்தை நிறுவுவதற்கு நம்மால் பங்களிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் பாதகமான விளைவுகளுடன் இன்று உலகம் போராடுகிறது என்று திரவுபதி முர்மு தெரிவித்தார். இந்த கடினமான காலகட்டத்தில், சவால்களை எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது நமது கடமையாகும் என்று குறிப்பிட்ட அவர், மரங்கள் நடுவதற்கான இந்திய அரசின் இயக்கத்தில் அனைவரும் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.