IND vs BAN, 1st T20I Live Streaming: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரின் முதல் போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணிக்கு குவாலியரில் உள்ள நியூ மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது. இப்போது டி20 தொடரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.
1. இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான முதல் டி20 போட்டி எப்போது நடைபெறும்?
இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் உள்ள நியூ மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
3. இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான முதல் டி20 போட்டி நடைபெறும் நேரம்?
இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது.
4. இந்தியா vs வங்கதேசம் இடையிலான முதல் T20 போட்டியின் நேரடி ஒளிபரப்பை எந்த சேனலில் டிவியில் பார்க்கலாம்?
ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க்கில் இந்தியா vs வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டியின் நேரடி ஒளிபரப்பை நீங்கள் பார்க்கலாம்.
5. இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான முதல் டி20 போட்டியை எந்த டிஜிட்டல் தளத்தில் பார்க்கலாம்?
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டி20 போட்டியை ‘ஜியோ சினிமா’வில் டிஜிட்டல் தளத்தில் பார்க்கலாம்.
6. இந்தியா vs வங்கதேசம் இடையிலான முதல் T20 போட்டியை எந்த சேனலில் இலவசமாகப் பார்க்கலாம்?
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் இலவசமாக பார்க்கலாம். இது கேபிள் டிவி அல்லது டிஷ்டிவி, ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டாடா பிளே போன்ற டிடிஎச் தளங்களில் டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் தெரியும்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் டி20 தொடர் அட்டவணை
முதல் டி20 போட்டி – அக்டோபர் 6, இரவு 7.00 மணி, குவாலியர்
இரண்டாவது டி20 போட்டி – அக்டோபர் 9, இரவு 7.00 மணி, டெல்லி
3வது டி20 போட்டி – அக்டோபர் 12, இரவு 7.00 மணி, ஹைதராபாத்
இரு அணிகளின் பிளேயர்கள் விவரம் :
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (Wk), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஜிதேஷ் சர்மா (WK), அர்ஷ்தீப் சிங் , ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.
வங்கதேசம்: நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்சீத் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், தௌஹீத் ஹ்ரிதயோய், மஹ்மூத் உல்லா, லிட்டன் குமார் தாஸ், ஜேக்கர் அலி அனிக், மெஹ்தி ஹசன் மிராஜ், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோஸ்கின் அஹ்மான் , தன்சீம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.