பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

துபாய்,

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் , டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சோபி டெவின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் சூசி பேட்ஸ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . தொடர்ந்து ஜார்ஜியா 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . பின்னர் சிறப்பாக விளையாடிய சோபி டெவின் அரைசதமடித்தார் .

இறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 161 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.