டெல்லி: மராத்தி உள்பட மேலும் 5 மொழிகளுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 3ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் ரயில்வே போனஸ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. இது தொடர்பாக […]