ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில், ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், ஐபோன் 15 சீரிஸின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன் இந்தியாவில் ரூ. 1,59,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பண்டிகை கால சலுகை விற்பனையில், ரூ.23000 என்ற விலையில், ஐபோன் 15 வாங்கும் வாய்ப்பு உள்ளது.
இ-காமர்ஸ் தளங்களில், முன்னணி நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போட்டி போட்டுக் கொண்டு சலுகை விற்பனைகளை அறிவித்துள்ளன. இதில், எலக்ட்ரானிக் பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீட்டி உபயோக பொருட்கள் என பலவற்றை தள்ளுபடியில் வாங்கலாம். மலிவான விலையில் பிரீமியம் போனான iPhone 15 பெற நல்ல வாய்ப்பு உள்ளது. சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் ஐபோன் 15 ஐ வாங்கி ஆயிரக்கணக்கான ரூபாய்களை சேமிக்கலாம். ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இதற்கு நல்ல எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வழங்குகின்றன. அதைப் பற்றிய முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் ஐபோன் 15 பிளிப்கார்ட் எக்ஸ்சேன்ஞ் ஆஃபர் (iPhone 15 Exchange Offer on Flipkart)
iPhone 15 தற்போது ரூ 69,900 ரூபாய் என்ற அளவில் உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நீங்கள் அதை ரூ 57,999 தள்ளுபடியில் பெறலாம். இது தவிர உங்களுக்கு ரூ.34,950 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும். எனினும் இது உங்கள் பழைய போன் எந்த நிலையில் உள்ளது, எந்த மாடல் என்பதை பொறுத்தது. அதிக பட்ச எக்ஸ்சேன்ஞ் வெற்றி பெற்றால், இந்த போன் ரூ.23,049க்கு மட்டுமே கிடைக்கும்.
ஆப்பிள் ஐபோன் 15 அமேசான் எக்ஸ்சேன்ஞ் ஆஃபர் (iPhone 15 Exchange Offer on Amazon)
ஆப்பிள் ஐபோன் 15 12GB மாடல் அமேசானில் ரூ.69,900 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தளத்தில் உங்களுக்கு ரூ.25,700 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்குப் பிறகு, ரூ.44,200 என்ற விலையில் ஐபோனை வாங்கலாம்
எக்ஸ்சேன்ஞ் சலுகை மற்றும் அதன் நிபந்தனைகள்
எக்ஸ்சேன்ஞ் சலுகைகளுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உங்கள் பழைய மொபைலின் நிலை – மாடல், செயல்திறன், கேமரா நிலை ஆகியவற்றை பொறுத்தது. மேலும், வாங்கிய போது வந்த அதன் பெட்டி மற்றும் பில் ஆகியவற்றை பாதுகாத்து வைத்திர்நுதால், அதற்கு ஏற்ப கூடுதல் மதிப்பு கிடைக்கும். இந்த விதிமுறைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடிந்தால், சிறந்த எக்ஸ்சேன்ஞ் சலுகையைப் பெறலாம்.
ஐபோன் 15 அம்சங்கள் மற்றும் கேமரா
iPhone 15 மாடலில் 3 வித சேமிப்பகள் கொண்டவை அடங்கும். இதில் 128GB, 256GB மற்றும் 512GB சேமிப்பு விருப்பங்கள் உள்ளன. இதில் நீங்கள் ஃபோட்டோ-வீடியோ புகைப்படம் எடுப்பதற்கு 5 வண்ண விருப்பங்களைப் பெறுகிறீர்கள். இதில் முதன்மை கேமரா 48 மெகாபிக்சல்கள் மற்றும் இரண்டாம் நிலை கேமரா 12 மெகாபிக்சல்கள் திறன் கொண்டவை.