தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில், ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘பிரதர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தொடர்ந்து இந்தப் திரைப்படத்துக்கான புரோமோஷன் வேலைகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் தொரூரில் உள்ள கசம் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில், நடிகை பிரியங்கா மோகன், தெலங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ யாசஸ்வினியின் தாயார், தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஹனுமண்டலா ஜான்சி ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, விழா நடந்துகொண்டிருக்கும் போதே மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மேடையில் இருந்த அனைவரும் காயமடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் சற்றுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது. உடனே விழா ஏற்பாட்டாளர்கள் பிரியங்கா மோகன் உள்ளிட்ட காயமடைந்தவர்களை மீட்டு, பாதுகாப்பான சூழலுக்கு அழைத்து சென்றனர். அதைத் தொடர்ந்து பிரியங்கா மோகன் கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில்,நடிகை பிரியங்கா மோகன் தன் எக்ஸ் பக்கத்தில், “ நான் தொரூரில் கலந்து கொண்ட நிகழ்வில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்தது. இப்போது நான் நலமாக இருக்கிறேன். சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும். என் மீதான உங்களின் அன்பு மற்றும் அக்கறைக்கு அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…