Railways: 3,445 Clerk – Typist பணியிடங்கள்; +2 படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்; முழு விவரம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3,445 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள Clerk & Typist பணியிடங்களுக்கு 3,445 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான விவரங்களைப் பார்ப்போம்..

பணியின் பெயர், காலியிடங்கள், சம்பளம், வயது விபரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை

இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வயது வரம்பில், SC / ST / OBC / PWD பிரிவினர்களுக்கு ரயில்வே, விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை மற்றும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

கல்வித்தகுதி என்ன?  

1. Commercial Cum Ticket Clerk / Trains Clerk பதவிக்கு, பிளஸ் 2-வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Accounts Clerk cum Typist & Junior Clerk cum Typist பதவிக்கு பிளஸ் 2-வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தியில் கணினியில் தட்டச்சு (Type) செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

SC / ST / PWD பிரிவினர்கள் மற்றும் பொது / OBC பிரிவைச் சேர்ந்த பட்டதாரிகள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வில் ஆங்கிலம்/ இந்தி/ தமிழ் ஆகிய மொழிகளில் கேள்விகள் இருக்கும்.

ஆன்லைன் முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் தட்டச்சு திறன், கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும், சான்றிதழ்கள் சரி பார்த்தல், மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தகுதியான நபர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விபரங்கள் e-Admit Card மூலம் தகுதியானவர்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் தெரியப்படுத்தும்.

தேர்வுக் கட்டண விவரங்கள்:

பொது / OBC / EWS ஆகிய பிரிவினர்களுக்குத் தேர்வுக் கட்டணம் ரூ.500.

SC / ST / Minorities / EX-Serviceman மற்றும் பெண்களுக்குத் தேர்வுக் கட்டணம் ரூ.250.

ஆன்லைன் முறையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: 20.10.2024

விண்ணப்பிக்கும் முறை:

இந்த லிங்கை கிளிக் செய்து www.rrbchennai.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யுங்கள்.

மேலும், கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள www.indianrailways.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.

முழுமையான அறிவிப்பைப் படிக்க, டவுன்லோட் செய்ய CENTRALISED EMPLOYΥΜΕΝΤ ΝΟ- TICE NO: CEN 06/2024 இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.