விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு பந்தல் கால் நடும் பூஜை நடத்தப்பட்டு இன்றே, அவரின் கூற்றுப்படி அவரின் கடைசிப் படத்துக்கான பூஜையும் இன்று நடைபெற்றது. படப் பூஜையில், படத்தின் இயக்குநர் ஹெச். வினோத், நடிகர்கள் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்தைத் தயாரிக்கும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், படப் பூஜையின் படங்களைக் இன்று காலை வெளியிட்டது. இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் நாளை முதல் தொடங்குகிறது என அறிவித்து, படப் பூஜையின் வீடியோவை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறது.
Neenga ethirpathu kondirundha Poojai video idhoo ♥️
Shoot commences tomorrow #Thalapathy69Poojai#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP… pic.twitter.com/J0GuqDaTUa
— KVN Productions (@KvnProductions) October 4, 2024