தனது மகள் பாலியல் வழக்கில் சிக்கியதாக மிரட்டப்பட்ட நிலையில், பதறிப்போன தாய் மாரடைப்பால் உயிரழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள அச்சனீரா அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 58 வயதுடைய மாலதி வர்மா ஆசிரியையாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மாலதி வர்மாவுக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களை காவல்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் மகள் பாலியல் வழக்கில் சிக்கி இருக்கிறார்.
அவர்மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் 1 லட்ச ரூபாயை 15 நிமிடத்திற்குள் வழங்க வேண்டும் என்று மிரட்டி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஏற்கெனவே அதிர்ந்துபோய் இருக்கும் மாலதி வர்மாவை மேலும் பதற வைக்க பெண் ஒருவரை அம்மா காப்பாற்றுங்கள் என அலறுவதைப்போல பேச வைத்திருக்கின்றனர். இதனால் தனது மகள் எங்கோ சிக்கிக்கொண்டார் என தாய் மாலதி வர்மா பதறிப்போன நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனால், நெஞ்சை பிடித்தவாறு வீட்டின் வாசலிலேயே சரிந்து விழுந்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், அரைகுறையாக அவர் இறுதி தருவாயில் கூறியதை கேட்டு செல்போனை ஆய்வு செய்தபோது மோசடி அழைப்பால் அவர் பதற்றத்தில் மாரடைப்பை எதிர்கொண்டு பலியானது தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…