“அரசை விமர்சிப்பதாக பத்திரிகையாளர் மீது கிரிமினல் FIR பதியக்கூடாது'' – உச்ச நீதிமன்றம்

ஒரு பத்திரிகையாளரின் எழுத்துகள், அரசாங்கத்தை விமர்சிப்பதாக இருக்கிறது என்று கருதுவதாலேயே அவர் மீது வழக்குப்பதிவுசெய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருக்கிறது. முன்னதாக, பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய் என்பவர், உத்தரப்பிரதேசத்தில் `பொது நிர்வாகத்தில் சாதியின் செயல்பாடுகள்’ என்ற செய்தி அறிக்கையை வெளியிட்டதற்காக மாநில அரசு தனக்கெதிராகப் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பத்திரிகையாளர்கள்

இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “ஜனநாயக நாடுகளில், ஒருவர் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரமானது மதிக்கப்படுகிறது. அதேபோல், அரசியல் சாசனத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. எனவே, ஒரு பத்திரிகையாளரின் எழுத்துகள், அரசாங்கத்தை விமர்சிப்பதாகக் கருதுவதால், அவர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படக்கூடாது” என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்குமாறு, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், “இதற்கிடையில், மனுதாரரின் கட்டுரை தொடர்பாக அவர் மீது கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது” என்று அறிவுறுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.