புதுடெல்லி: உள்நாட்டில் பயன்படுத்தப்படும் சீன தயாரிப்புகளின் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன், லேப்டாப், ரெப்ரிஜிரேட்டர், கார்பாகங்கள், எல்இடி பல்பு என ஏராளமான பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதன்மூலம், 79 சதவீத இந்திய குடும்பங்கள் சீன ரேடார் மூலமாக உளவு பார்க்கப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 25 சதவீதம் பேர் ஒன்று அல்லது இரண்டு சீன தயாரிப்புகளை பயன்படுத்துபவர்களாக உள்ளனர். 21 சதவீம் பேர் 5 சீன தயாரிப்புகளை யும், 4 சதவீதம் பேர் 6-10 சீன தயாரிப்பு களையும், 2 சதவீதம் பேர் 10 சீன தயாரிப்புகளையும் தங்களது வீடுகளில் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். மேலும், 21 சதவீதம் பேர் சீன தயாரிப்புகளை பயன்படுத்தினாலும் அதன் எண்ணிக்கையை கண்டறிய முடியவில்லை.
அதேநேரம், 21 சதவீத குடும்பங் கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட் ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரிக்கல் பொருட்களை அவர்களது வீடுகளில் பயன்படுத்துவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்த அளவில், இந்தி யாவில் 79 சதவீத குடும்பங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீன தயாரிப்புகளை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாதனங்கள் தொடர்புடைய சீன செயலிகளில் பதி வாகும் வீடியோ, போட்டோ போன்ற பயனாளர் விவரங்களை சீனா கண் காணிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏனெனில் பெரும்பாலும் சீனாவில் உள்ள சர்வரில்தான் இந்திய குடும்பங்களின் அனைத்து வகை டேட்டாக்களும் சேமித்து வைக்கப்படுகின்றன.
பயனாளர் ஒருவர் பழைய நிகழ்வை மீட்டெடுக்க விரும்பினால் அது சீன சர்வர் வழியாகத்தான் மேற்கொள்ள இயலும். இந்த நிலையில், இது போன்ற நடவடிக்கை இந்திய குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையலாம். இவ்வாறு லோக்கல் சர்க்கிள் தெரிவித்துள்ளது.