சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல கல்லூரிகள் முதல்வர்கள் இல்லாமலும், பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன. மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் காரணமாக, முதல்வர்கள் நியமிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் முதல்வர் பதவி காலிய இருந்த 14 மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு முதல்வர்களை […]