2002-ல் கொல்லப்பட்ட தந்தை; பழிவாங்க 22 வருடங்கள் காத்திருந்த மகன்; அதிர வைத்த சம்பவம்- பின்னணி என்ன?

Lகுஜராத் மாநிலம், அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள குடியிருப்பு காலனியில், காவலாளியாக பணிபுரிந்தவர் நக்கத் சிங் பாடி (50). இவர் வேலை முடித்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பிக்அப் டிரக் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரக் ஒட்டுநர் கோபால் சிங் பாடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, கோபால் சிங் பாடியை கைது செய்தது.

கொலை

ஆனால், இது தொடர்பாக கோபால் சிங் பாடியிடம் விசாரித்தபோதுதான், சுமார் 22 ஆண்டுகளாக காத்திருந்து, பழிவாங்க செய்யப்பட்ட திட்டமிட்ட கொலை எனத் தெரியவந்தது. இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, “ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரின் படோடா கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அதற்கு பக்கத்து கிராமமான அஜாசர் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தொடர் பகையில் இருக்கிறார்கள். இரண்டு கிராம மக்களிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லை.

இந்த நிலையில், கடந்த 2002-ம் ஆண்டு அஜாசர் கிராமத்தைச் சேர்ந்த ஹரி சிங் பாடி, படோடா கிராமத்தைச் சேர்ந்த நக்கத் சிங் பாடி என்பவரால் லாரி ஏற்றி கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அப்போது, கோபால் சிங் பாடி 8 வயது சிறுவன். அப்போதிலிருந்து கோபால் சிங் பாடியிடம் தந்தை கொலை செய்யப்பட்டது பற்றி தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். இதனால் தந்தையை கொலை செய்தவரை பழிவாங்க வேண்டும் என மனதிற்குள் பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்திருக்கிறார்.

காவல்துறை

இந்த நிலையில், நக்கத் சிங் பாடி குஜராத் மாநிலத்தில் வேலை செய்வது கோபால் சிங் பாடிக்கு தெரியவந்திருக்கிறது. அதனால், கோபால் சிங் பாடி, அடிக்கடி நக்கத் சிங் பாடி இருக்கும் பகுதிக்கு வந்து நோட்டமிட்டிருக்கிறார். மேலும், இந்தக் கொலையை நிகழ்த்துவதற்காக சில தினங்களுக்கு முன்பு, வங்கியில் கடன் வாங்கி பிக்கப் டிரக் ஒன்றை வங்கியிருக்கிறார். அந்த வாகனத்தின் மூலம் நக்கத் சிங் பாடியை திட்டமிட்டபடி கொலை செய்திருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சுமார் 22 ஆண்டுகள் காத்திருந்து, தன் தந்தை எப்படி கொல்லப்பட்டாரோ அதே போன்று கொலை செய்தவரும் மரணிக்க வேண்டும் என திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொலை, கேட்போர் மனதை பதறவைக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.