`லப்பர் பந்து’ திரைப்படத்தில் அத்தனை இயல்பாய் நடித்திருந்து ரசிகர்களை ஈர்த்தவர் திருச்சி சரவணக்குமார். டி எஸ் கே என்றால் சட்டென நினைவுக்கு வரும். `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக மக்களை சிரிக்க வைத்தவர் இந்த திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராகவும் தடம் பதித்திருக்கிறார். அவரை நம் அலுவலகத்தில் சந்தித்தோம்.
“இந்தப் படத்துல நான் வில்லனாக இருந்தாலும் மக்கள் என்னை கொண்டாடுறாங்கன்னா அதுக்கு சின்னத்திரை தான் முக்கியக் காரணம். நான் என்னைக்குமே சின்னத்திரையை மறக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் சின்னத்திரை, வெள்ளித்திரை அப்படிங்கிற வித்தியாசமெல்லாம் இல்ல. இந்தப் படம் எனக்கான அடையாளத்தை உருவாக்கியிருக்கு” என்றவரிடம் `குக்கு வித் கோமாளி சீசன் 5′ குறித்துக் கேட்டோம்.
“நான் பார்ட் டைம் கோமாளியாகத்தான் போயிட்டு வந்துட்டு இருந்தேன். சில எபிசோட் வந்தாலும் என்னால முடிஞ்சதை பண்ணிட்டிருந்தேன். எனக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கேட்டுட்டும் இருந்தேன். அப்படித்தான் ரவூஃபா மேம் எனக்கு அந்த நிகழ்ச்சியில் கோமாளியா பங்கேற்க வாய்ப்பு கொடுத்தாங்க. நான் வந்த ஒரு எபிசோடும் எனக்கு நல்லதொரு பெயரை வாங்கிக் கொடுத்துச்சு. சீசன் 5 வாய்ப்பும் அப்படித்தான் கிடைச்சது. எனக்கு ஜோயா சமைக்கிறது ரொம்பப் பிடிக்கும். உண்மையாகவே அவங்க நல்லா தாங்க சமைப்பாங்க. அங்க எல்லா குக்குவோட சமையலுமே சூப்பரா இருக்கும்!” என்றதும் `பிக்பாஸ் சீசன் 8′ போட்டியாளர் பட்டியலில் உங்கப் பெயரும் இருக்குன்னு கேள்விபட்டோமே? எனக் கேட்டோம்.
“பிக்பாஸ் ஷோவுக்குள்ள போகணுங்கிறது என் பக்கெட் லிஸ்ட்ல இருக்கு. நீங்க சொன்ன மாதிரி நான் வீட்டுக்குள்ள போறேன்னா இப்ப அதுக்கான பேக்கிங்ல தானே இருப்பேன்.. ஆனா, நான் பேட்டி கொடுத்துட்டு இருக்கேன்ல அதனால போகலைங்க. இப்ப வரைக்கும் எனக்கு எந்த ஃபோன் காலும் வரல. வந்தா கண்டிப்பா போவேன்!” என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து டி எஸ் கே நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!