நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்ட அன்றே, நடித்துக் கொண்டிருக்கும் படத்தோடு, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படத்தின் வேலைகளை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, The GOAT திரைப்படத்துக்குப் பிறகு விஜய் தன்னையுடைய நடிப்பில் கடைசிப் படத்துக்கான வேலையில் இறங்கிவிட்டார்.
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றது. நேற்றைய தினமே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பந்தல் காலும் நடப்பட்டது. இந்த நிலையில், இதுதான் விஜய்யோட கடைசி படம் என்று சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்திருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் மாநாடு மற்றும் அவரின் படம் குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “இதுதான் கடைசி படமா என்று தெரியவில்லை. இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும். இதற்கு முன்னால் கடைசி படம் என்றுதான் சொன்னார். அதன்பிறகு இப்போது ஒரு படம். எத்தனை கடைசிப் படம் என்று தெரியவில்லை. புது அரசியல்வாதிகள் பேசுவதையெல்லாம் எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று தெரியவில்லை.
அதேசமயம், மாநாடு நடத்துவது சவாலான விஷயம் என்று அவர் கூறியிருக்கிறார். இருப்பினும், மாநாட்டைச் சிறப்பாக நடத்திவிடுவார். அதில் சந்தேகமே இல்லை. சினிமாவுக்கு வருவது போல கூட்டம் வந்துவிடும். ஆனால், கட்சி எப்படி நடத்துவார் என்று தெரியவில்லை. வேலையை விட்டுவிட்டு மாநாட்டுக்கு வாருங்கள் என்று கூறுவதெல்லாம் சரியான அறிவுரை அல்ல” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…