Top 10 Most Handsome Men 2024: BTS பாடகர் முதல் ஹ்ரித்திக் ரோஷன் வரை – யாருக்கு எந்த இடம் தெரியுமா?

உலகில் மிகவும் கவர்ச்சிகரமான ஆண் பிரபலங்கள் யார் என்பது குறித்து, பிரிட்டிஷ் இதழ் ஒன்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், இந்தியா உள்ளிட்ட 163 நாடுகளில் உள்ள பிரபலங்கள், அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், பன்முகத் திறமை, வசீகரம், பணிவு, இரக்கம், மக்களுடனான நெருக்கம் ஆகியவை இந்தப் போட்டியில் முக்கியமான நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டது.

டேவிட் பெக்கம் – ரியான் ரெனால்ட்ஸ் – ஹென்றி கேவில் – இட்ரிஸ் எல்பா

இதன் அடிப்படையில் நடந்த ஆய்வின் முடிவில், 10 பிரபலங்கள் உலகின் மிகவும் வசீகரமிக்க ஆண்களாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் முதலிடம் வீ (V) என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும், தென் கொரியாவின் பிரபல பாடகர் குழுவான BTS குழுவின் பாடகர், Kim Taehyung பெற்றிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து, இங்கிலாந்து நடிகர் ராபர்ட் பாட்டின்சன் (Robert Pattinson), இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம் (David Beckham), கனடா நாட்டின் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் (Ryan Reynolds), UK நடிகர் ஹென்றி கேவில் (Henry Cavill) ஆகியோர் இரண்டும், மூன்று, நான்கு, ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கின்றனர்.

மேலும், இந்தியாவின் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆறாம் இடத்தையும், இங்கிலாந்து நடிகர், பாடகர் இட்ரிஸ் எல்பா (Idris Elba) ஏழாம் இடத்தையும் பதிவு செய்திருக்கின்றனர். அமெரிக்க நடிகரும், படகருமான ஜாக் எஃப்ரான் (Zac Efron), ஆஸ்திரேலியா நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (Chris Hemsworth), அமெரிக்க நடிகர் டாம் குரூஸ் (Tom Cruise) ஆகியோர் அதற்கு அடுத்ததடுத்த இடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.