`கங்குவா' இசைவெளியீட்டு விழா, எங்கே, எப்போது நடக்கிறது தெரியுமா? ஆச்சர்யமூட்டும் சூர்யாவின் ப்ளான்!

சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ‘சூர்யா 44’ படப்பிடிப்பு தொடங்கின வேகத்தில், படம் நிறைவடைந்திருக்கிறது என அறிவித்துள்ளனர். படம் இத்துடன் நிறைவடைந்துவிட்டதா? சூர்யாவின் அடுத்த புராஜெக்ட் என்ன? அடுத்த மாதம் ‘கங்குவா’ திரைக்கு வருகிறது.. ‘கங்குவா’ டீமின் திட்டமென்ன இப்படி பல்வேறு கேள்விகளுக்கான விடை இங்கே!.

‘கங்குவா’

‘கங்குவா’ படப்பிடிப்பை முடித்த கையோடு ‘சூர்யா 44’ படத்திற்கான அறிவிப்பு வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் சூர்யாவின் 44 வது படமாகும். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், சுஜித் சங்கர், நாசர், ‘டாணாக்காரன்’ தமிழ் என பலரும் நடித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கியது. அதன்பின்னர் ஊட்டி, கேரளா, பின்னிமில், எண்ணூர் துறைமுகம் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

ஜோஜூ ஜார்ஜூடன்

அந்தமானில் சூர்யா – பூஜா ஹெக்டே காம்பினேஷனில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ (Kecha Khamphakdee)வின் அந்தமான் சிறைசாலை உள்பட பல இடங்களில் அனல் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும், சேஸிங்கும் படமாக்கப்பட்டன. அதைப் போல, கேரளா, ஊட்டி ஷெட்யூல்களில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இப்போது படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என அறிவித்திருப்பது என்பது, சூர்யாவின் போர்ஷன் மட்டுமே நிறைவடைந்துள்ளது என்றும் இன்னும் பத்து நாள்கள் படப்பிடிப்பில் மற்ற நடிகர்களின் போர்ஷன்கள் படமாக்கப்பட உள்ளன. அதன் பிறகே மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

pooja hegde

கார்த்திக் சுப்புராஜின் படப்பிடிப்பு நிறைவந்துவிட்டதால், சூர்யா அடுத்து ‘கங்குவா’ படத்தின் புரொமோஷன்களில் கவனம் செலுத்த உள்ளார். கேரளா, மும்பை, ஹைதராபாத் என பல மாநிலங்களுக்கு அவர் செல்கிறார். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. முன்னதாக அதன் இசை வெளியீடு குறித்த திட்டமிடலும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. அனேகமாக இம்மாதம் 20ம் தேதி சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இசை வெளியீடு நடைபெற உள்ளது. வருகின்ற தீபாவளி அன்று ‘சூர்யா 44’ படத்தின் டைட்டிலும் அறிவிக்கும் திட்டத்தில் உள்ளனர். ‘கங்குவா’ வெளியீட்டை முடித்த பின்னரே, அடுத்த படத்திற்கு செல்கிறார் சூர்யா. அது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படமாக இருக்கும் என்கின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.