புதுடெல்லி: பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத் தின் கீழ் முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இத்திட்டத்தில் தொழில் பயிற்சி பெறுவோருக்கு ஒராண்டுக்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி அளிக்கப்படும். மேலும், ஒரு முறை மானியமாக ரூ.6,000 வழங்கப்படும். மொத்தம் தொழிற்பயிற்சி பெறுவோருக்கு ரூ.66,000 கிடைக்கும்.
இத்திட்டத்தில் சிஎஸ்ஆர் நிதி அடிப்படையில் 500 முன்னணி நிறுவனங்கள் பதிவு செய்யவுள்ளன. முதல் நாளிலேயே 111 முன்னணி நிறுவனங்கள், கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ள இணையதளத்தில் பதிவுசெய்து 1079 பேருக்கு தொழில்பயிற்சி வழங்குவதாக அறிவித் துள்ளன. பயிற்சி பெற விரும்பும்21 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் அக்டோபர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களின் பட்டியலை அக்டோபர் 26-ம் தேதி கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிடும். விண்ணப்பதாரர்களைநிறுவனங்கள் நவம்பர் 7-ம் தேதி வரை தேர்வு செய்து, பயிற்சி அளிப்பதற்கான கடிதத்தை வழங்கும்.
மத்திய அரசின் இடஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் தொழில்பயிற்சி பெறுவோர் தேர்வு செய்யப்படுவர். சொந்த மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களில் பயிற்சி அளிப்பதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.800 கோடி செலவாகும். 5 ஆண்டு காலத்தில் 1 கோடிபேருக்கு தொழிற் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.