மும்பை நேற்றிரவு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது 86 வயதாகும் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு நேற்று நள்ளிரவு திடீரென ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறப்பட்டது. ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ரத்தன் டாடா சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட […]