போட்டோ பிரியர்கள் கவனத்திற்கு… குறைந்த விலையில் 50MP – 200MP கேமிரா கொண்ட சூப்பர் போன்கள்

ஸ்மார்ட்போன்கள் தொலைத் தொடர்பு சாதனம் என்ற நிலை மாறி விட்டது. அது, நமது அன்றாட அபணிகள் பலவற்றிற்கு தேவையான அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அதில் ஒன்று அதனை கேமிராவாக பயன்படுத்துவது. தொலைபேசி வாங்க திட்டமிடும் பலர், வைக்கும் முதல் கோரிக்கை தொலைபேசியில் கேமரா சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில், ரூ.25 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்ள். இந்த ஸ்மார்போன்களில் DSLR வகை கேமராவை விட சிறந்த வகையில் புகைப்படங்கள் எடுக்கலாம்.

சிறந்த கேமிரா கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் சிறந்த தேர்வாக இருக்கும். 200 மெகாபிக்சல்கள் வரை கேமராவைப் பெறும் அத்தகைய ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். சிறப்பான அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. ரூ.25 ஆயிரம் பட்ஜெட்டில் இவை கிடைக்கும்.

Redmi Note 13 Pro

ரெட்மி நோட் 13 ப்ரோவில், போட்டோ-வீடியோகிராஃபிக்காக 200 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. அதன் இரண்டாம் நிலை கேமராவை பொறுத்தவரை, இதில் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவைக் கொண்டுள்ளது. வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபிக்கு 16 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் முதன்மை கேமரா மூலம், மிக சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். இந்த போனின் விலை உங்கள் பட்ஜெட்டிற்கு பொருந்தும், நீங்கள் அதை ரூ.23,999க்கு பெறுவீர்கள்.

OnePlus Nord CE4

OnePlus ஃபோனில் சிறந்த அம்சங்களை கொண்ட கேமரா உள்ளது. இதன் மூலம் சிறந்த புகைப்பட-வீடியோகிராஃபி செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உங்கள் வீடியோ காலிங் மிக சிறந்த அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை பற்றி பேசுகையில், இதன் விலை ரூ.24,999.

iQOO Z9s Pro

iQOO ஸ்மார்ட்போனில் நீங்கள் இரட்டை கேமரா அமைப்பைப் பெறுவீர்கள், இதில் முதன்மை கேமரா 50 மெகாபிக்சல்கள் மற்றும் இரண்டாம் நிலை கேமரா 8 மெகாபிக்சல்கள். முன் கேமராவைப் பற்றி பேசுகையில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. வெவ்வேறு நிலைகளில் கேமரா சிறப்பாக செயல்படுகிறது. இது வேகமான ஃபோகஸ் மற்றும் ஷட்டர் வேகத்துடன் வருகிறது. iQOO ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.24,999.

Motorola Edge 50 Fusion

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனில், முதன்மை கேமரா 50 மெகாபிக்சல்கள். இரண்டாம் நிலை கேமரா 13 மெகாபிக்சல்கள். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த ஃபோன் மூலம் நீங்கள் சிறந்த புகைப்படம் எடுக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.22,999.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.