நடிகர் அஜித் `அஜித் குமார் ரேஸின்’ என்ற ரேஸிங் குழுவை தொடங்கியிருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
கூடுதலாக, அடுத்த ஆண்டு கார் பந்தயங்களிலும் அஜித் பங்கேற்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இதுமட்டுமல்ல, `வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ என்ற நிறுவனத்தையும் இவர் ஏற்கெனவே தொடங்கியிருந்தார். அதாவது பலரையும் உலகத்தின் அத்தனை இடங்களுக்கும் பைக் ரைட் செய்ய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
அஜித் எப்போதும் பல பகுதிகளுக்கு நீண்ட பைக் பயணம் மேற்கொள்வதை விரும்புவார். இப்படியான ஒரு பைக் பயணத்தில் அஜித் பேசிய ஒரு காணொளியும் சமீபத்தில் வெளியானது. அதில்,” நீங்கள் அதிகம் பயணம் செய்யுங்கள் என்பதுதான் என்னுடய அட்வைஸ். பயணத்தை விட சிறந்த கல்வி எதுவும் கிடையாது. சாதியும் மதமும் நீங்கள் சந்திக்காத மனிதர்களையும் வெறுக்க வைக்கும். நீங்கள் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு தேசங்களையும், மதங்களையும் சேர்ந்த மனிதர்களுடன் ஒன்றி பழகி அவர்களின் கலாச்சாரத்தை அனுபவிக்கும்போது அது உங்களை வேறு வடிவிற்கு மாற்றும்.” எனக் அழகாக எடுத்துரைத்திருந்தார் அஜித்.
தற்போது அஜித்தின் `வீன்ஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ உலக சாதனை படைத்திருக்கிறது. இந்த நிறுவனம் ஹார்ட்லி டேவிட்சன் சென்னை மற்றும் ஹார்ட்லி டேவிட்சன் ஹைதராபாத்துடன் இணைந்து அந்தமானில் ஒரு நிகழ்வை நடத்தியிருக்கிறது . இந்த பிரமாண்ட நிகழ்வில் பலர் கலந்துக் கொண்டு ஹார்ட்லி டேவிட்சன் பைக்கில் ரைட் அடித்திருக்கிறார்கள். இப்படியான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு உலக சாதனை புத்தகத்திலும் தற்போது இடம் பெற்றிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…