Amaran: "நான் 'அமரன்' படத்தை தயாரிக்க காரணம்..!" – கமல்ஹாசன் சொன்ன பதில்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். நெல்சன், விஜய் தொலைக்காட்சியிலிருந்த போது அவருடன் அங்கு பணியாற்றியவர் ராஜ்குமார் பெரியசாமி. ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை இயக்கியிருக்கிறார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ரங்கூன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அமரன்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ என்ற உண்மை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார்.

அமரன்

கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்திய புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமல் ஹாசனிடம் அமரன் படத்தை தயாரிக்க ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, குருதிப்புனல் படம் எல்லாம் புனை கதைகள். இது அது அல்ல. இது நிஜம். நமக்காக நிகழ்ந்த நிஜம். இந்த கதை ஏன் இப்படி போச்சு என்று கேட்கவே முடியாது.

கமல் ஹாசன்

இந்த வீரருக்கு ( மேஜர் முகுந்தன்) நிகரான வீரம் வீட்டிலும் ( மேஜர் முகுந்தனின் மனைவி) இருக்க வேண்டும். அவரைப் பற்றிய கதையும் இது. இந்த கதையை நாங்கள் தேர்வு செய்தோம் என்று கூற முடியாது. இது நிகழ்ந்து விட்டது. நாங்கள் இதை கண்டெடுத்ததில் பெருமை கொள்கிறோம். இதில் எங்களுக்கு பங்கு என்னவென்றால் கடமையைச் செய்திருக்கிறோம் ” என்று பதிலளித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.