Good bad ugly : குட் பேட் அக்லிக்காக உடல் எடையைக் குறைத்த அஜித் குமார்; லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

நடிகர் அஜித் குமாரின் 63-வது திரைப்படம் குட் பேட் அக்லி (Good bad ugly). மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்துக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 50 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் பிரசன்னா இந்தப் படத்தில் இணைந்தது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அஜித் குமார்

அதில், “அன்புள்ள நண்பர்களே, தல அஜித் குமார் சாரின் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது உண்மைதான். என் கனவு ஒன்று நனவாகியிருக்கிறது. மங்காத்தா முதல் ஒவ்வொரு முறை அஜித் குமார் சாரின் படங்கள் அறிவிக்கப்படும்போது, ​​​​அதில் நானும் ஒருவராக இருக்க வேண்டும் என விரும்பினேன். தற்போது அது நடந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், நடிகர் அஜித் குமார், குட் பேட் அக்லி திரைப்படத்துக்காக உடல் எடையை குறைத்திருப்பதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் அஜித் குமாரின் லேடஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகியிருக்கிறது. அதில், நடிகர் அஜித் குமாரின் உடல் எடை குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இரண்டு கைகளிலும் வரையப்பட்டிருக்கும் டாட்டூவும் கவனம் ஈர்த்திருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.