தமிழ்த் திரையுலகில் சாதாரண பாத்திரங்களில் நடித்து முக்கிய இடத்தைப் பிடித்த நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம், மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்தத் திரைப்படத்தை, சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரி குவித்து வருகிறது.
ஒரு திரைக்கதையை எப்படி கொண்டு போக வேண்டும் என்பதற்கு இந்தப் படம் நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்தப் படம், நூறாவது நாளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், உலகளவில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் குழுவான சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்கு BMW காரை பரிசளித்திருக்கின்றனர். இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், “இந்த அற்புதமான பரிசுக்கு சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோருக்கு மிக்க நன்றி. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…