Relaince Jio… சுமார் 3 மாதங்களுக்கு 168 GB டேட்டாவுடன்… OTT பலன்கள்

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கட்டணத்தை உயர்த்தினாலும், அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) தொடர்ந்து கொடுத்த வண்ணம் தான் உள்ளது. இதில் மலிவான சிறந்த திட்டங்கள் சிலவற்றை பற்றி அறிந்து கொள்வோம்.

தொலைத்தொடர்பு துறையில் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள அவ்வப்போது மலிவான ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. கடந்த ஜூலை 2024 இல், ஜியோ பல திட்டங்களின் கட்டணத்தை 15 சதவீதம் அதிகரித்த நிலையில், பலர் பிஎஸ்என்எல் பக்கம் சாயத்தொடங்கினர். இதனை தடுக்க ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. 

ஜியோவின் ரூ.1049 திட்டம்

ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் தினசரி டேட்டாவுடன் வருகின்றன. வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளைச் செய்பவர்களுக்கும், ஆன்லைனில் படிக்கும் பயனர்களுக்கும் அதிக மொபைல் டேட்டா (Mobile Data) தேவைப்படுகிறது. அந்த வகையில், ஜியோவின் ரூ.1049 கட்டணத்தில் கிடைக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் பயனுள்ளதாக இருக்கும். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு தடையில்லா சேவைகளை அனுபவிக்க இந்த திட்டம் உதவும்.

பொழுதுபோக்கு மற்றும் நீண்ட கால டேட்டா பயன்பாட்டிற்கான சிறந்த தேர்வு

இந்த ரூ.1049 திட்டம் தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டிற்கும் செலவு குறைந்த கொண்ட திட்டங்களை விரும்பும் பயனர்களுக்கு ஏற்றது. 84 நாட்கள் வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்புகள், 168 ஜிபி டேட்டா மற்றும் OTT சந்தாக்கள் ஆகியவற்றுடன், இந்த திட்டம் ஜியோ பயனர்களுக்கு தற்போது கிடைக்கும் சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும்.

டேட்டா நன்மைகள்: 84 நாட்களுக்கு 168ஜிபி

அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் வகையில், இந்தத் திட்டம் மொத்தம் 168ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் தினசரி 2ஜிபி அதிவேக டேட்டாவை வழங்கும். தடையின்றி இணைய சேவையை பெற இது உதவும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளும் அடங்கும்.

ஆப்பிள் ஐபோன் 15 அமேசான் எக்ஸ்சேன்ஞ் ஆஃபர் (iPhone 15 Exchange Offer on Amazon)

ஆப்பிள் ஐபோன் 15 12GB மாடல் அமேசானில் ரூ.69,900 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தளத்தில் உங்களுக்கு ரூ.25,700 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்குப் பிறகு, ரூ.44,200 என்ற விலையில் ஐபோனை வாங்கலாம்

அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா திட்டம் (Unlimited True 5G data plan)

மேலும், இந்த திட்டம் ஜியோவின் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் 5G நெட்வொர்க் கவரேஜ் உள்ள பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், வரம்பற்ற 5G டேட்டாவை இலவசமாக அனுபவிக்க முடியும்.

இலவச OTT சந்தாக்கள்

பொழுதுபோக்கு பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் இந்த திட்டத்தில், பல OTT இயங்குதளங்களுக்கான இலவச அணுகலும் அடங்கும். சோனி லிவ் மற்றும் ZEE5 இலவச சந்தாக்களை ஜியோவழங்குகிறது. தனித்தனி OTT சந்தாக்களுக்கான சந்தாவை, தனியால செலுத்தில் வாங்க வேண்டிய தேவையிலிருந்து பயனர்களை காப்பாற்றுகிறது.

ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் பிற இலவச அணுகலகள்

ஜியோ சினிமா
ஜியோ டிவி
ஜியோ கிளவுட்

மேலே குறிப்பிட்டுள்ள OTT தளங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ஒரு விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை பயனருக்கு வழங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.