மீண்டும் டைரக்ஷன் பக்கம் களமிறங்கியிருக்கிறார் நடிகை ரேவதி.
கடந்த 2002-ம் ஆண்டு ‘மிதிர் மை ஃப்ரண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படம் அப்போது சிறந்த ஆங்கில திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றதும் பலருக்கும் நினைவிருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து `பிர் மிலேங்கே’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் `கேரளா கஃபே’, `மும்பை கட்டிங்’ போன்ற ஆந்தலஜிகளில் தலா ஒரு பாகத்தை இயக்கியிருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு `சலாம் வெங்கி’ என்ற இந்தி திரைப்படத்தை இயக்கியிருந்தார். திரைப்படம், ஆந்தாலஜி என டைரக்ஷன் பக்கம் பயணித்தவர், தற்போது வெப் சீரிஸிலும் களமிறங்கியிருக்கிறார். டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு ஓ.டி.டி., தளத்திற்கு ஒரு தமிழ் வெப் சீரிஸை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பான அறிவிப்பைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை ரேவதி. அப்பதிவில், “இயக்குநராக மீண்டும் வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ஹாட் ஸ்டாருக்கான ஒரு தமிழ் சீரிஸ் இயக்கிக் கொண்டிருக்கிறேன். அக்டோபர் 5-ம் தேதி ஷூட் தொடங்கியது. இயக்குநராகக் களமிறங்கும்போது எனர்ஜி மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.” என்பதோடு படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…