அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், குராயூர்–கள்ளிக்குடி, மதுரை மாவட்டம் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு 14ம் நூற்றாண்டில் ஆண்ட வென்று மாலையிட்ட வீரபண்டியன், பெருமாளுக்கு ஒரு கோயில் எழுப்ப விரும்பினான். அவனது நாடு விரிந்து பரந்திருந்தது. அவன் மதுரைக்கும் அடிக்கடி சென்று வருபவன். கள்ளிக்குடியை அடைந்த நேரத்தில் அவனுக்கு ஸ்ரீமந் நாராயணனின் நினைவு மனதில் எழுந்தது. இதை நாராயணனின் சித்தமாகவே உணர்ந்த அவன், நினைவு எழுந்த இடத்திலேயே பெருமாளுக்கு கோயில் அமைத்தான். சுவாமிக்கு வேணுகோபாலன் என்று பெயரிட்டான். அதன்பின் வீரபாண்டியன், பொன்னின் […]