இனி இந்த வீரருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை! ஒருநாள் அணியும் கேள்விக்குறி தான்!

லக்னோவில் நடைபெற்ற இரானி கோப்பை 2025 போட்டியில் மும்பை அணி ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை வீழ்த்தி கோப்பையை  வென்றுள்ளது. இரண்டு அணிகளும் சிறப்பாக பேட்டிங் செய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும் முதல் இன்னிங்சில் மும்பை அணி அதிக ரன்கள் அடித்து இருந்ததால், வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர். இந்த தொடரில் மும்பை அணிக்காக விளையாடி ஷ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்சில் அரை சதம் அடித்தார். நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எப்படியாவது இடம் பெற வேண்டும் என்று முயற்சி செய்தார். இருப்பினும் அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சமீபத்தில் ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்று உள்ளார். இதனால் நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற வாய்ப்பில்லை. அவருக்கு பதில் சர்பராஸ் கான் தனது இந்திய இடத்தை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோசமான பார்ம் காரணமாக ஐயர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2023 ஒருநாள் உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி ஐயர் அதன் பிறகு பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட இல்லாமல் வெறும் 187 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த மாதம் நடைபெற்ற துலீப் டிராபியில் இந்தியா D அணிக்காக ஐயர் விளையாடினார். அதில் மொத்தமாக 154 ரன்களை மட்டுமே அடித்தார். இதில் இரண்டு டக் அவுட், இரண்டு அரைசதங்கள் அடங்கும். இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தாலும்,  இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மும்பைக்கான ரஞ்சி கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை. மீண்டும் இந்திய அணியில் இடம் பெற உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும்.  மும்பை அணி வரும் அக்டோபர் 11ம் தேதி பரோடாவை எதிர்கொள்கிறது. அதன் பிறகு அக்டோபர் 18ம் தேதி மகாராஷ்டிராவை எதிர்கொள்கிறது. இதற்கிடையில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடிய 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய சர்பராஸ் கான் இரானி கோப்பை போட்டியில் 222 ரன்கள் அடித்து அசத்தி  இருந்தார். இதன் மூலம் நியூசிலாந்து டெஸ்டுக்கான இந்திய அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 

Mumbai squad selected for first two matches of Ranji Trophy against Baroda from 11th to 14th October 2024 and against Maharashtra from 18th to 21st October 2024. #RanjiTrophy #Cricket #IndianCricket #CricketTwitter pic.twitter.com/UuBeu0Uqdc

— Rajesh Khilare (@Cricrajeshpk) October 7, 2024

முதல் இரண்டு போட்டிகளுக்கான மும்பையின் ரஞ்சி கோப்பை அணி: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ப்ரித்வி ஷா, ஆயுஷ் மத்ரே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர் (WK), சித்தான்ட் அதாத்ராவ் (WK), தம்ஸ் முலானி, ஹிமான்ஷு சிங், ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, முகமது. ஜூன்ட் கான், ராய்ஸ்டன் டயஸ்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.