சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வளங்கள், பெருந்தோட்டம் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து காலநிலை மாற்றங்களின் அதிகரிக்கின்ற விளைவுகள் மூலம் இடர்களுக்கு ஆளாகக்கூடிய இலங்கை மற்றும் இந்திய சமூகங்களின் தாங்குதிறனை பலப்படுத்துவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை மற்றும் உலக உணவுத் திட்டத்திற்கும் இடையில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வளங்கள், பெருந்தோட்டம் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே நேற்று (07.10.2024) நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம் 05 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்துவதுடன், கருத்திட்டத்திற்கு 13 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மொனறாகலை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் குருநாகல் போன்ற மாவட்டங்களில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.