ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு, அட்டகாசமான தீபாவளி சலுகை அளித்துள்ளது. ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை பெற விரும்புபவர்களுக்கு, தீபாவளி ஆஃபர் மூலம் பல சிறந்த பிராண்ட்பேண் திட்டங்களைப் பெறலாம். குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையம், வரம்பற்ற அழைப்பு மற்றும் இலவச OTT சந்தாக்களை வழங்குவதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் தொடர்ந்து சந்தையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கிராமப்புறங்களுக்கும் அதன் வரம்பை விரிவுபடுத்துவதால், ஜியோ ஃபைபர் அதிக அளவில் விரும்பப்படும் பிராட்பேண்ட் சேவையாக உள்ளது. தனது பயனர்களுக்கு புதிய திட்டங்கள் மற்றும் அற்புதமான பலன்களை வழங்குவதன் மூலம் இந்த தீபாவளியை சிறப்பானதாக ஆக்க உள்ளது .
புதிய பிராட்பேண்ட் பயனர்களை மையமாகக் கொண்டு, சமீபத்தில் ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களின் மூலம், ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் மேம்பட்ட இணைப்பு மற்றும் பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்கும் அதே நம்பமுடியாத ஆஃபர்களை அனுபவிக்க முடியும்.
ஜியோ ஃபைபரின் தீபாவளி தமாகா திட்டங்கள்
இந்த பண்டிகை காலத்திற்காக, ஜியோ ஃபைபர் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக சிறப்பு மூன்று மாத திட்டங்களை வெளியிடுகிறது, அதன் வழக்கமான ஆறு அல்லது பன்னிரெண்டு மாத சேவை விருப்பங்களில் இருந்து மாறுபட்டதாகவும், அதிக நன்மைகளை வழங்குவதாகவும் உள்ளது.
30Mbps திட்டம்
₹2,222 கட்டணத்திலான திட்டம் மூன்று மாதங்களுக்கு வரம்பற்ற டேட்டா, இலவச குரல் அழைப்புகள் மற்றும் 800 டிவி சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது. கூடுதலாக, பயனர்கள் ₹101க்கு 100ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெறுவார்கள், இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதன் கீழ் Disney+ Hotstar, Sony Liv, ZEE5, JioCinema Premium, Sun NXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe, மற்றும் ETV Win (via JioTV+)போன்ற தளங்களுக்கான OTT சந்தாக்களும் அடங்கும். 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அக்சஸ் ஆகியவை அடங்கும்.
100Mbps திட்டங்கள்
Jio 100Mbps வேகத்தில் இரண்டு திட்டங்களை வழங்குகிறது:
1. ₹3,333 திட்டம்: இந்தத் தொகுப்பில் 150ஜிபி கூடுதல் டேட்டாவுடன் மூன்று மாத சேவையும் அடங்கும். Disney+ Hotstar, Sony Liv, ZEE5, JioCinema Premium, Sun NXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe மற்றும் ETV Win (JioTV+ வழியாக) ஆகியவற்றுக்கான OTT சப்ஸ்க்ரிப்சன் உள்ளடக்கியது.
2. ₹4,444 திட்டம்: மூன்று மாத வேலிடிட்டியுடன், இந்த திட்டம் 200ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது, அன்லிமிடெட் கால்கள் மற்றும் OTT அணுகல், தடையில்லா பொழுதுபோக்கை உறுதி செய்கிறது. இந்த திட்டம் மற்ற இரண்டு திட்டங்களைப் போலவே OTT நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கஸ்டமர்களுக்கு Netflix (அடிப்படை), Amazon Prime Lite (2 ஆண்டுகளுக்கு) மற்றும் FanCode (JioTV+ வழியாக) அக்சஸ் வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ அன்லிமிடெட் மொபைல் திட்டங்கள்
பிராட்பேண்ட் சலுகைகளுக்கு கூடுதலாக, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வரம்பற்ற மொபைல் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, வலுவான தரவு தொகுப்புகள் மற்றும் கூடுதல் சேவைகளை வழங்குகிறது:
₹749 திட்டம்: டேட்டா விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இது 72 நாட்களுக்கு செல்லுபடியாகும். பயனர்கள் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள், இது அதிக இணைய பயனர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
₹999 திட்டம்: இந்த விரிவான திட்டமானது வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி SMS உடன் 98 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை வழங்குகிறது. தடையற்ற, அதிவேக அனுபவத்திற்காக 5G இணைப்பின் கூடுதல் நன்மையுடன், JioTV, JioCloud மற்றும் JioCinema போன்ற Jio இன் செயலிகளின் தொகுப்பிற்கான அணுகலை இது கொண்டுள்ளது.