Vettaiyan: `இது தமிழுக்கு புதுசு கண்ணா!' – நல்ல முன்னெடுப்பை கையில் எடுத்திருக்கும் `வேட்டையன்' குழு

ரஜினி நடித்திருக்கும் `வேட்டையன்’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சனும் 33 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார். தற்போது இத்திரைப்படம் திரையரங்குகளில் ஆடியோ விளக்கத்துடனும் (Audio description) & கேப்ஷன்களுடனும் ( க்ளோஸ்ட் கேப்ஷன்ஸ்) ஒளிபரப்படும் என அறிவித்திருக்கிறது படக்குழு. இந்த இரண்டு விஷயங்களைக் கொண்டு திரையரங்குகளில் ஒளிபரபப்பும் முதல் தமிழ் திரைப்படம் `வேட்டையன்’தான்.

பொதுமக்கள் அனைவரின் நலனையும் கருத்திக் கொண்டு இந்த விஷயத்தை தயார் செய்திருக்கிறது படக்குழு. `ஆடியோ விளக்கம் மற்றும் க்ளோஸட் கேப்ஷன் என்றால் என்ன?’ என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். உதாரணத்திற்கு, பார்வை சவாலுடையவர் ஒருவர் ஒரு திரைப்படத்தை அதன் ஒலிகளை வைத்துப் புரிந்துக் கொள்வார். இருப்பினும் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய விஷயங்கள் குறித்து அவரால் புரிந்துக் கொள்ள முடியாது. அந்த சமயத்தில் இந்த ஆடியோ விளக்கமிருந்தால் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் விஷயங்களை ஆடியோ வடிவிலான விளக்க உரையைக் கேட்டு அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். இதுக்காகப் பிரத்யேக ஹெட்சைட்டை பயன்படுத்தி, அப்பார்வையாளர்கள் கேட்கலாம். க்ளோசட் கேப்ஷன்ஸ் என்பது காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் ஒலிகளை, கேப்ஷன்களைப் போல எழுத்து வடிவில் இருக்கும். செவி சவாலுடையோர் படித்து முழுமையாகப் புரிந்துக் கொள்வார்கள்.

Vettaiyan

இன்னும் சுலபமாக சொன்னால்… திரையில் இரண்டு பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையே உரையாடல் நிகழும்போது திடீரென அவர்களுக்கு பின்னிருந்து ஒரு பூனை ஒலியை எழுப்புகிறது. அந்த பூனையின் ஒலி கதையில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த மாதிரியான விஷயங்களை புரிந்துக் கொள்ள பார்வையற்றோருக்கும், காது கேளாதோருக்கு சிரமமாக இருக்கும். அந்த சமயத்தில் ஆடியோ விளக்கமிருந்தால் பார்வையற்றோருக்கு சுலபமாக அதை புரிந்துக் கொள்ள உதவும். காது கேளாதோரும் இந்த க்ளோஸட் கேப்ஷன்களை மூலம் அந்த பூனை நகர்வதை தெரிந்துக் கொள்வார்கள்.

ரஜினி மாதிரியான உச்ச நட்சத்திரத்தின் திரைப்படத்தைக் காண அனைத்துத் தரப்பு மக்களும் திரையரங்கங்களுக்கு வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இதனை செய்திருக்கிறது படக்குழு.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.