இந்திய கிரிக்கெட் பிளேயர்களுக்கு மெகா ஜாக்பாட்! தீபாவளி போனஸ் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Diwali Bonus for Indian Cricketers Latest : தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பதால் ஊர் முழுக்க போனஸ் எவ்வளவு கிடைக்கும்? என்பது தான் பேச்சாக இருக்கிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு நிச்சயம் கூடுதல் போனஸ் கிடைக்கும். ஆனால் எவ்வளவு போனஸ் தொகை என்பதை தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் துறை வாரியாக விரைவில் அறிவிக்க இருக்கின்றனர். இந்த சூழலில் உலகிலேயே பணக்கார கிரிக்கெட் அமைப்பாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு தொகை கொடுக்கும் என்ற ஆச்சரியமான கேள்வி பலரிடம் இருக்கிறது. ஏற்கனவே கூறியதுபோல், உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றால் இந்தியா தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இந்திய கிரிக்கெட் வாரியம் வருமானம்

ஏனென்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு வருமானம் 18 ஆயிரம் கோடி என்றால் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வெறும் 700 கோடி ரூபாய் தான். இதை வைத்தே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாயை எவ்வளவு அதிகம் என்று யூகித்துக் கொள்ளலாம். அதேபோல், இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான சம்பளமும் மற்ற நாட்டு கிரிக்கெட் பிளேயர்களைவிட மிக மிக அதிகம். உதாரணத்துக்கு இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டி ஆடும் பிளேயர்களுக்கு 15 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கும். ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் ரூபாய், 20 ஓவர் போட்டிக்கு 3 லட்சம் ரூபாய் ஊதியம் உண்டு.

பிசிசிஐ வழங்கும் போனஸ்

இதனைத் தவிர, ஆண்டு போனஸ் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு பிளேயருக்கு வழங்கும் கட்டணத்தைத் தவிர ஆண்டுதோறும் பிசிசிஐ சம்பள பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பிளேயர்களுக்கு தனியாக ஆண்டு சம்பளம் என்று ஒன்று வழங்கப்படுகிறது. ஏ பிளஸ், ஏ, பி,சி,டி என வீரர்களின் தரவரிசை பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிளேயர்களும் இடம்பெறும் குரூப்புக்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளம் தனியாக வழங்கப்படுகிறது. இந்த சம்பள பட்டியலில் இருக்கும் பிளேயர்களுக்கு தான் போனஸூம் இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குவதுண்டு. 

போனஸ் தொகை எப்போது கிடைக்கும்?

இந்த போனஸ் தொகையை தான் தீபாவளிக்கு முன்பாக பிசிசிஐ கிரிக்கெட் பிளேயர்களுக்கு கொடுக்கிறது. அந்த ஆண்டில் ஒரு பிளேயர் டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி, டி20 என எத்தனை கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருக்கிறார் என்பதை பொறுத்து இந்த போனஸ் வழங்கப்படுகிறது. ஒரு பிளேயருக்கு எத்தனை விழுக்காடு போனஸ் வழங்கப்படுகிறது என்பதை வெளிப்படையாக பிசிசிஐ தெரிவிக்கவில்லை. ஆனால், இந்திய கிரிக்கெட் பிளேயர்களுக்கு வழங்கப்படும் போனஸ் என்பது நிச்சயம் பல லட்சங்களிலும், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட பிளேயர்களுக்கு கோடிகளிலும் இருக்கும் என்கிறது கிரிக்கெட் வட்டாரம். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.