சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 7100க்கு விற்பனையானது. இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 7030க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 56,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
