புதுடெல்லி: மத்திய வெளியுறவு அமைச்சகம்நேற்று வெளியிட்ட அறிக்கை: 21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19-வது கிழக்கு ஆசியா மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிவரும் 10, 11-ம் தேதிகளில் லாவோஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைநகர் வியான்டியனில் அந்நாட்டின் பிரதமர் சோனெக்சே சிபாண்டோனை சந்தித்து இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
கூட்டாண்மை விரிவாக்கம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பின் திசையை உறுதி செய்வதன் மூலம் இந்தியா-ஆசியான் உறவுகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ஆசியான் – இந்தியா மாநாட்டில் மதிப்பாய்வு செய்யப்படும். நமதுபிராந்திய முக்கியத்துவம் வாய்ந்தபிரச்சினைகளில் தலைவர்களிடையே உள்ள கருத்து பரிமாற்றத்துக்கான வாய்ப்பை கிழக்கு ஆசியா உச்சி மாநாடு வழங்கும்.