திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பகுதியில் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பிடிபட்டதாக சந்தேகிக்கப்படும் 1084 கிலோகிராம் மீன்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைப்பற்றப்பட்டது.
வணிக வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதன்படி, 2024 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மீன் சேகரித்துக்கொண்டிருந்த இருவர் சோதனையிடப்பட்டனர். அங்கு, வணிக வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பிடிபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்து எண்பத்து நான்கு (1084) கிலோகிராம் மீன்களுடன் இருவரையும் (02) டிங்கி படகு ஒன்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 38 வயதுடைய நிலாவெளி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், டிங்கி படகு மற்றும் மீன்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.