“B Tech, B.E, MCA படித்திருக்கிறீர்களா?'' – SBI வங்கியில் 1,497 காலி பணியிடங்கள்!

எஸ்.பி.ஐ வங்கியில் 1,497 காலி பணியிடங்கள் பணித்தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணபிக்க கடைசிநாள் 14.10.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

என்ன வேலை?

திட்ட மேலாண்மை மற்றும் டெலிவரி, இன்ஃப்ரா சப்போர்ட் மற்றும் கிளாவுட் ஆப்ரேஷன், நெட்வர்க்கிங் ஆப்ரேஷன், ஐ.டி ஆர்கிடெக்ட், தகவல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் துணை மேலாளர் பதவி மற்றும் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான வேலை.

பணி: Specialist Cadre Officer மொத்த காலியிடங்கள்: 1,497

பணி மற்றும் காலியிடங்கள் விவரங்கள்:

பணி: Deputy Manager(Systems)-Project Management & Delivery காலியிடங்கள்: 187

பணி: Deputy Manager(Systems)-Infra Support & Cloud Operations காலியிடங்கள்: 412

பணி: Deputy Manager(Systems)-Networking Operations

காலியிடங்கள்: 80

பணி: Deputy Manager(Systems)-IT Architect

காலியிடங்கள்: 27

பணி: Deputy Manager(Systems)-Information Security காலியிடங்கள்: 7

எஸ்.பி.ஐ வங்கி

தகுதிகள்:

திட்ட மேலாண்மை மற்றும் டெலிவரி பதவிக்கு பி.டெக், பி.இ, எம்.சி.ஏ, எம்.டெக் அல்லது எம்.எஸ்.சி படித்திருக்க வேண்டும். கூடுதலாக சில சான்றிதழ் படிப்புகளும் தேவைப்படுகின்றன.

அனுபவம்: சாப்ட்வேர் டெவலப்மெண்டில் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

இன்ஃப்ரா சப்போர்ட் துணை மேலாளர் பதவிக்கு பி.டெக், பி.இ, எம்.சி.ஏ, எம்.டெக் அல்லது எம்.எஸ்.சி படித்திருக்க வேண்டும்.

அனுபவம்: ஐடி துறையில் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

நெட்வர்க்கிங் ஆப்ரேஷன் துணை மேலாளர் பதவிக்கு பி.டெக், பி.ஐ அல்லது எம்.டெக் படித்திருக்க வேண்டும்.

அனுபவம்: ஐடி துறையில் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

ஐ.டி ஆர்கிடெக்ட் பதவிக்கு பி.டெக், பி.இ, எம்.சி.ஏ, எம்.டெக் அல்லது எம்.எஸ்,சி படித்திருக்க வேண்டும்.

அனுபவம்: ஐடி துறையில் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

தகவல் பாதுகாப்பு துணை மேலாளர் பதவிக்கு பி.இ, பி.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்.சி அல்லது எம்.டெக் படித்திருக்க வேண்டும்.

அனுபவம்: ஐடி இடர் மேலாண்மையிலோ அல்லது தகவல் பாதுகாப்பிலோ குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

வேலைவாய்ப்பு

அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கு பி.டெக், பி.இ, எம்.சி.ஏ, எம்.டெக் அல்லது எம்.எஸ்.சி படித்திருக்க வேண்டும்.

அனுபவம்: தேவையில்லை.

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட சான்றிதழ் படிப்பு தேவைப்படுகிறது.

சம்பளம்: ரூ.48,480 – ரூ.93,960

வயது: துணை மேலாளர்கள் பதவிக்கு 25 – 35

அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கு 21 – 30

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 14.10.2024

என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?

நவம்பர் மாதம் ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர் நேர்காணல் நடத்தப்படும்.

ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க முடியும்.

இணையதள முகவரி: https://bank.sbi/web/careers/current-openings

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.