Bigg Boss Tamil 8 : `அவ்வளவுதான் பொறுமை சாமி!' – ரஞ்சித்துக்கும் ரவீந்தருக்கும் இடையே பறந்த சண்டை!

வழக்கமாக இருக்கும் அவ்வளவு சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் இந்த வருடத்தின் பிக் பாஸின் தொடக்க எபிசோடுகளில் இல்லை.

ஆண், பெண் என இரு அணியினரும் அவர்களிலிருந்து ஒருவரை எதிர் டீமுக்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் ஒரு தீர்க்கமான விதி போட்டுவிட்டார். இதற்கு மாஸ்டர் பிளான் தீட்டுகிறோம் எனப் பெண்கள் அணியினர் கூடிப் பேசுகிறார்கள். ஆனால் ஒரு தெளிவான முடிவெடுப்பதற்கு அவர்களிடம் ஒற்றுமை இல்லாததால், அவர்களுக்கிடையே சண்டையும் வாக்குவாதத்தையும் உருவாக்கி களத்தைச் சூடு பிடிக்க வைத்தது. இருப்பினும், தேவையில்லாத `முத்துக்குமரன் – ஜெஃப்ரி’ வாக்குவாதம், குழந்தைத்தனமான உப்புக்கான போராட்டம் என இரண்டாவது நாள் சற்று சோர்வாகவே நகர்ந்தது.

மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாளிலிருந்து நேற்று வரை ரஞ்சித் அமைதி காத்துத்தான் வந்தார். அனைவரிடமும் `வாங்க சாமி, சொல்லுங்க சாமி’ எனப் பண்பாகவே பேசினார். சொல்லப்போனால் ரஞ்சித்தை பிக் பாஸ் அழைத்தால்கூட `என்னங்க சாமி’ என மென்மையாகவே ரஞ்சித் கேட்டார். இரண்டாவது நாளில் பெண்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட முத்துக்குமரன் ஆண்கள் வீட்டிற்கு வருவதற்காக அனுமதி கேட்கும்போதும் இளகிய மனம் படைத்தவர் போல் `இதுக்கெல்லாம் விடலாம் தானே’ எனத் தன்மையாகப் பேசி விட்டுக் கொடுக்க ஆண்கள் அணியிடம் கேட்டார்.

Ranjith – Ravindar Fight – Day 3

மற்றொரு பக்கம் 7 வருடங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ததன் மூலம் நிகழ்ச்சியின் அத்தனை நுட்பங்களையும் தெளிவாகக் கற்று வைத்திருக்கிறார் ரவீந்தர். அதை வைத்து தந்திரமாகக் காய் நகர்த்தியும் வருகிறார். சச்சனா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு ரவீந்தர்தான் முதல் முக்கியமான காரணம். அவர், தான் வெளியே சென்று விடுவோமோ என்கிற பயத்தில் வீட்டின் பிற போட்டியாளர்களின் சிந்தனையையும் மடைமாற்றிவிட்டார். அவர் திட்டம் போட்டதுபோலவேதான் இறுதியில் சச்சனா வெளியே அனுப்பப்பட்டார். இப்படியான தந்திரங்களைச் செய்தவர் எந்த வம்புக்கும் போகாமல்தான் இரண்டாவது நாள் வரை இருந்தார்.

மூன்றாவது நாளான இன்று ரஞ்சித்துக்கும் ரவீந்தருக்குச் சண்டை கிளம்பியிருக்கிறது. அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வது போன்ற ப்ரோமோவை வெளியிட்டிருக்கிறார்கள். ரவீந்தர் ஏதோ ஒரு விஷயத்தை மிரட்டும் தொனியில் கைநீட்டிச் சொல்ல அதற்கு டென்ஷனாகி `கையை இறக்குங்க’ எனச் சூடாகியிருக்கிறார் ரஞ்சித். இப்படியான வாக்குவாதம் நீண்டு கொண்டே போக அடிபிடி வரை சென்றிருக்கிறது போல….

Ranjith – Ravindar Fight – Day 3

மென்மையாக அமைதி காத்து வந்த ரஞ்சித்தையே இப்படிக் கோபப்பட வைக்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது? இந்த சண்டை இன்றைய தினத்தின் எபிசோடை எப்படி விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.