தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விழுப்புரம்,கோவை. சென்னை, சேலம், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் உள்ள பணிமனைகளில் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வழங்கப்படும் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள், போக்கு வரத்து பணிமனை வாரியாகஉள்ள காலியிடங்களின் விவரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
அட்டவணை
பயிற்சியின் பெயர்: GraduateApprentices (Engineering)
மொத்த காலியிடங்கள்: 201
உதவித்தொகை : ரூ.9,000
பயிற்சியின் பெயர்: Graduate Apprentices (Non-Engi- neering)
மொத்த காலியிடங்கள்: 158
உதவித்தொகை : ரூ.9,000
கல்வித்தகுதி:
மேற்கண்ட Graduate Apprentice பயிற்சிக்கு, அப்ரண்டிஸ்பயிற்சி வழங்கப்படும் பாடப்பிரிவுகளில் பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். B.E. / B Tech/ B.A./B.Sc./B.Com./BBA/BCA ஆகிய ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Diploma Apprentices (Tehcnician Apprentice)
மொத்த காலியிடங்கள்: 140
உதவித்தொகை: ரூ.8,000
கல்வித்தகுதி: Diploma Apprentice பயிற்சிக்கு டிப்ளமோ என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2020, 2021, 2022, 2023, 2024 ஆகிய கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது பயிற்சியில் உள்ளவர்கள், ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
நேர் முகத்தேர்வு 13-11-2024 முதல் 15-11-2024 வரை நடைபெறும். நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களின் விபரம் 28-10-2024 அன்று BOAT இணையதளத்தில் வெளியாகும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள் 21-10-2024
விண்ணப்பிக்கும் முறை:
https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வித்தகுதி மற்றும் இதர விபரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர், இணையதளத்தில் கொடுக்கப்படும் Unique Enrolment Number-ஐ பயன்படுத்தி அதே இணையதளத்தில் கொடுக்கப்பட் 4 Top Down Button- கிளிக் செய்து அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை தேர்வு செய்து விண்ணபிக்க வேண்டும்.
மேலும் முழுவிவரங்களுக்கு Notification for engagement of Apprentices for the year 2024-25 இந்த லிங்கை கிளிக் செய்து முழுவிவரங்களையும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.