ஸ்ரீபெரும்புதூரின் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள சாம்சங் ஆலையின் ஊழியர்கள் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருப்பதும் போராட்ட பந்தலை அகற்றியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல்வாதிகள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தலைப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கின்றனர்.
அந்தப் பதிவில், ” தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை.
தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!!!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb