சென்னையின் அடையாளங்களுள் பழைமை வாய்ந்த திரையரங்குகளுக்கும் முக்கியமான இடம் இருக்கிறது.
அப்படியான பழைமைவாய்ந்த திரையரங்குகள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் அடையாளமாக மாறிய கதையும் இங்கு இருக்கிறது. அப்படி சென்னையின் முக்கிய திரையரங்குகளில் உதயம் தியேட்டரும் ஒன்று. `உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்’ போன்ற பாடல்கள் சொல்லும் இந்த திரையரங்கத்துக்கும் ரசிகர்களுக்குமான உறவை!
சென்னை ஜாபர்கான் பேட்டையில் இருக்கும் இந்தத் திரையரங்கம் தற்போது `உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன்’ என்ற நான்கு திரைகளுடன் இயங்கி வருகிறது. பழமை மாறாத அதே நீண்ட இடம் கொண்ட முகப்பு இன்றும் அந்த இடத்தை கடந்துச் செல்லும் மக்களை ஈர்க்கிறது. `இந்தத் திரையரங்கம் கூடிய விரைவில் மூடப்படவிருக்கிறது. திரையரங்க பில்டிங் மொத்தமாக இடிக்கப்படும்’ என்ற தகவல் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தது. கடந்த இரு தினங்களாக `ரஜினியின் வேட்டையன் திரைப்படம்தான் உதயம் தியேட்டரில் திரையிடப்படும் கடைசி திரைப்படம் .
அதன் பிறகு இந்த தியேட்டர் மூடப்படுகிறது’ என்ற தகவல் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. பல பெருமைகளை உள்ளடக்கிய இந்த திரையரங்கம் மூடப்படுகிறது என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள திரையரங்க மேலாளரை தொடர்பு கொண்டு பேசினோம். பரவி வந்த தகவலுக்கு விளக்கமளிக்க தொடங்கிய அவர், ” வேட்டையன் திரைப்படம்தான் உதயம் திரையரங்கத்தில் காட்சிப்படுத்தும் கடைசி திரைப்படம். அதன் பிறகு திரையரங்கம் மூடப்படுகிறது என பரவி வரும் செய்தி உண்மையல்ல. அடுத்ததாக தீபாவளிக்கு அமரன் திரைப்படத்தையும் நாங்கள் திரையிடவுள்ளோம். திரையரங்கம் மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய 5, 6 மாதங்களுக்கு மேல் ஆகலாம்.” எனக் கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…