இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் 9 ஆம் திகதி பொரளை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ஆறு இலட்சம் (600,000) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வாகனத்தை (01) கைது செய்தனர்.
அதன்படி, இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த விசேட தகவலின் பிரகாரம், கடற்படையினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, 2024 ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பொரளை பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் (01) மற்றும் அவர் பயணம் செய்த லொரி வண்டி சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் ஆறு இலட்சம் (600,000) போதை மாத்திரைகளுடன் குறித்த சந்தேகநபர் (01) மற்றும் லொறி வண்டி (01) கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய மன்னாரைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01), போதை மாத்திரைகள் மற்றும் லொறி வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.