மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தன் டாடா மாய்ந்திருக்கிறார். அவருக்கு வயது 86.
தொழில்துறையில் பல முக்கியமான முன்னெடுப்புகளை சாத்தியப்படுத்திய ரத்தன் டாடா இளைஞர்களுக்கு நம்பிக்கையளித்து அவர்களின் ஆதர்ச நாயகனாக திகழ்ந்தார்….இல்லை…திகழ்கிறார்! திகழ்வார். கல்விதான் முன்னேற்றத்துக்கான ஒரே வழி என்பதை மக்களிடம் எடுத்துரைத்ததோடு அதற்காக பல நன்கொடைகளையும் வழங்கியிருக்கிறார். இப்படியான பல ஆக்கப்பூர்வமான செயல்களுக்காக அவர் என்றும் கொண்டாடப்படுவார்.
உப்பு முதல் நம் அன்றாட விஷயங்களில் டாடாவின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. இதில் ரத்தன் டாடாவின் சில முக்கியமான முன்னெடுப்புகளும் அடங்கும். பெரிய தொழிலதிபர்கள் எப்போதும் பரபரப்பாக சுற்றுக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களுக்கு சினிமா பார்பதற்கு பெரிதளவில் நேரமிருக்கிறது. ஆனால் ரத்தன் டாடா ஹாலிவுட் ஆக்ஷன் காமெடி திரைப்படங்களையெல்லாம் விரும்பி தொடர்ந்து பார்ப்பாராம். அதிலும் `தி அதர் கைஸ் (The Other Guys)’, `தி லோன் ரேஞ்சர் (The lone ranger)’, போன்ற திரைப்படங்கள் ரத்தன் டாடாவின் ஃபேவரைட் லிஸ்ட்களில் முதலிடத்தில் இருக்குமாம். இதை 2020-ம் ஆண்டு ஒரு நேர்காணலில் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமான ஷாந்தனு நாயுடு கூறியிருப்பார்.
அதுமட்டுமல்ல, அமிதாப் பச்சனின் ஒரு படத்தையும் இவர் தயாரித்திருக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான `ஏட்பார்’ என்ற த்ரில்லர் படத்தின் தயாரிப்பாளர்களில் ரத்தன் டாடாவும் ஒருவர். எதிர்பார்த்த அளவுக்கு இத்திரைப்படம் வெற்றி அடையவில்லை. ஆனால், ரத்தன் டாடா பாலிவுட் திரைப்படங்களுக்கு பெரிய ரசிகரெல்லாம் கிடையாதாம். பாலிவுட் திரைப்படங்களை அவர் ஒரு நேர்காணலில் விமர்சித்தும் இருக்கிறார். அமிதாப் பச்சனும் ரத்தன் டாடாவும் இத்திரைப்படத்திற்கு முன்பே நல்ல நண்பர்கள்தான். இத்திரைப்படத்தின் தோல்வி அவர்களின் நட்பை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. பாலிவுட்டின் உச்சநட்சத்திரங்கள் பலருக்கும் ரத்தன் டாடா ஊக்கமளித்திருக்கிறார். அமீர் கான், ஹூமா குரேஷி போன்ற பிரபலங்களுக்கெல்லாம் ரத்தன் டாடா அவ்வளவு ஃபேவரைட்!
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…