உதவி எண்கள் அறிவிப்பு
திருவள்ளூர் ரயில் விபத்தை தொடர்ந்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
ரயில் விபத்து தொடர்பாக 044 – 2535 4151, 044 – 2435 4995 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்
மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
தகவல் கிடைக்கப்பெற்றவுடன், மாண்புமிகு அமைச்சர் @Avadi_Nasar அவர்களையும் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.
மீட்பு மற்றும்…
— M.K.Stalin (@mkstalin) October 11, 2024
என்ன நடந்தது?
12578 என்ற எண் கொண்ட மைசூரு – தர்பங்கா எக்ஸ்பிரஸ் மைசூரு ரயில் நிலையத்திலிருந்து 1 நிமிடம் தாமதமாக இன்று காலை 10:30 மணிக்கு கிளம்பியிருக்கிறது. பெங்களூர், காட்பாடி, விஜயவாடா, குண்டூர், பிரயாக்ராஜ், பாட்னா ஆகிய பகுதிகளை கடந்து மூன்றாவது நாளில் இந்த ரயில் பீகாரின் தர்பங்காவை எட்டும். மைசூரில் இன்று காலை கிளம்பிய இந்த ரயில் இரவு 7:39 மணிக்கு தமிழகத்தின் பெரம்பூர் ரயில் நிலையத்தை எட்டியிருக்கிறது. அங்கிருந்து 7:44 மணிக்கு கிளம்பி குண்டூரை நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரவு 10:15 மணிக்கு இந்த ரயில் குண்டூரை அடைந்திருக்க வேண்டும். ஆனால், பெரம்பூருக்கும் குண்டூருக்கும் இடையில் கவரப்பேட்டை என்கிற இடத்தை ரயில் கடக்கையில் சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. பயணிகள் ரயில் இரண்டு பெட்டிகளில் தீப்பற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்

திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.