ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. என்கவுன்ட்டர்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.
ரஜினிகாந்துடன், அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், அபிராமி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த இளம் நடிகர்கள், கடந்த தினங்களில் நேர்காணல்களிலும் மேடைகளிலும் அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்துப் பேசி வந்தனர்.
அவ்வகையில் படத்தில் ஏ.எஸ்.பி ரூபா கதாபாத்திரத்தில் நடித்த ரித்திகா சிங், தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “ரஜினி சாருடன் இருக்கும்போது, ஒருவர் அறியும் மிகப் பெரிய உண்மை என்ன என்றால், நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால், தனித்துவமாக ஜொலிப்பீர்கள். வாழ்க்கை உங்கள் மீது எதை எறிந்தாலும், அப்போதும் அன்பாக இருக்க வேண்டும் என்ற முடிவையே தேர்ந்தெடுப்பீர்கள்.
ரஜினி சார், கண்களின் மூலமாகவும் புன்னகையாலும் பகிரும் அன்பானது மிகுந்த சக்தி வாய்ந்தது. அது உங்களுக்குள் இருக்கும் காயங்களை ஆற்றும். ஒரு பார்வையிலேயே அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு அளிக்கும் உணர்வை, நான் இதற்கு முன் அனுபவித்தது கிடையாது.
கேமராக்கள் ரொலிங்கில் இல்லாதபோது அவர் மிகவும் வார்மாக, சில்லாக (warm & chill) இருக்கிறார். ஆனால் ஆக்ஷன் சொன்னவுடன் முற்றிலும் புதியவராக மாறிவிடுகிறார். நம்ப முடியாத மனிதராக உருவெடுக்கிறார். அந்த நம்ப முடியாத மனிதரைத்தான் நாம் நேசிக்கிறோம்.
இன்னொரு ரஜினிசார் எப்போதும் வரப்போவதில்லை. அவரைப் போல இன்னொரு லெஜண்டரி மனிதன் பிறக்கப்போவதில்லை. இன்னொரு புத்தம் புதிய முழு பிரபஞ்சமே உருவானாலும் இன்னொரு தலைவர் உருவாக முடியாது. அவர் ஒருவர்தான். அவர் மட்டும்தான்” என்று நெகிழ்ந்துள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…