ரஜினி நடித்திருக்கும் `வேட்டையன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படம் என்கவுன்ட்டர் தொடர்பான உரையாடலைக் கிளப்பியிருக்கிறது. படத்தில் ஃபகத் ஃபாசில் பொழுதுபோக்கான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.
ரானாவும் வில்லன் கதாபாத்திரத்தில் மீண்டும் தமிழில் களமிறங்கியிருக்கிறார். நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் தீவிர ரசிகரும்கூட!
அவர், ” நீதித்துறைப் பற்றிய வலுவான, அழுத்தமான சோசியல் டிராமா திரைப்படமாக இருக்கிறது வேட்டையன். அதில் தலைவரின் மொமன்ட்டுகளும் நிரம்பியிருக்கிறது. முதல் ஃப்ரேமிலிருந்து தலைவர் ஃபையராக இருக்கிறார். தலைவரையும் அமிதாப் பச்சனையும் ஒரே திரையில் பார்ப்பது ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. ஃபகத் ஃபாசிலின் பேட்டரி கதாபாத்திரம் நகைச்சுவையாக இருக்கிறது. அனிருத் வழக்கத்தை போலவே இசையில் கலக்கியிருக்கிறார். இவ்வளவு நுட்பமான படத்தை தலைவருக்கு கொடுத்திருக்கும் இயக்குநர் த.செ. ஞானவேலுக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…